சென்னை பிலால் உணவகங்கள் மீது புகார்: உணவருந்திய 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

23 hours ago 2

சென்னை: சென்னையில் பிலால் உணவகங்களில் உணவருந்திய 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் மவுண்ட் ரோடு பிலால் என்ற பிரபலமான உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரம்ஜானுக்கு முதல் 30 ஆம் தேதி சகோதரிகளான 2 கல்லூரி மாணவிகள் குடும்பத்தினருடன் வந்து உணவருந்தி உள்ளனர். இவர்கள் இருவரும் மட்டன் குழம்பு சாப்பிட்டதாகவும் அதற்கு பிறகு இவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராயப்பேட்டை மருத்துவமனை தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். இதே போல் திருவல்லிக்கேணி பகுதியில் ஹோட்டல் பிலால் பிரியாணி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திலும் ரம்ஜானுக்கு முதல் நாள் இங்கு பீப் சாப்பிட்ட 18 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தண்டையார்பேட்டை மருத்துவ மனையிலும், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருவல்லிக்கேணியில் செயல்படும் பிலால் பிரியாணி என்ற ஓட்டல் முன்பு திரண்டு முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். ஆனால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ரீதியாக புகார் அளிக்குமாறு அவர்கள் கூறியதை அடுத்து தற்போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 18 பேரின் குடும்பத்தினர் புகார் அளித்து வருகின்றனர். இந்த உணவகத்தில் கெட்டுப்போன உணவுகள் விற்கப்பட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது சம்மந்தப்பட்ட இரு ஹோட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

The post சென்னை பிலால் உணவகங்கள் மீது புகார்: உணவருந்திய 20 பேருக்கு உடல்நலம் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article