சென்னை: சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு நேற்று மதியம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. ‘சமில் அல்முகைதீன்’ என்ற பெயரில் வந்த மின்னஞ்சலை ஊழியர்கள் பார்த்த போது, அதில் 2.30 மணிக்கு குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின்படி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்து எடப்பாடி பழனிசாமி வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதை தொடர்ந்து அபிராமபுரம் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியர் முகவரியை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
The post சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.