சென்னை: நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து; டிரைவர் பலி

5 hours ago 4

 

சென்னையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இன்று மாலை சென்றுகொண்டிருந்த லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனால், லாரி சாலையிலேயே நிறுத்தப்பட்டு பழுது நீக்க டிரைவர் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.

அப்போது, வெளிவட்ட சாலையில் வேகமாக வந்த மற்றொரு லாரி நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இந்த கோர விபத்தில் மோதிய லாரியின் டிரைவர் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article