தண்டையார்பேட்டை: சென்னை தங்கசாலை பகுதியில் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 38 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனை மின்ட் தெரு அருகே நேற்று இரவு பூக்கடை தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 38 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைபொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை கொத்தவால்சாவடி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில், சவுக்கார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிஷ்ராவல் (25) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இவரிடம் இருந்து 38 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதை யடுத்து கொத்தவால்சாவடி காவல் ஆய்வாளர் ராஜன் தலைமையில் போலீசார் எங்கிருந்து போதைபொருள் வாங்கினார், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் கொத்தவால்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்னை தங்கசாலை பகுதியில் மெத்தம் பெட்டமைன் வைத்திருந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.