சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

1 day ago 3

சென்னை: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் தொடங்கி மிகவும் சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டி ஏப்ரல் 5ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணியில் இருந்து ஆன்லைன் மூலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.chennaisuperkings.com என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4.000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, மும்பை அணிக்கு எதிரான 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.

கடந்த 28ம் தேதி நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. அடுத்த நடைபெற்ற குஜராத் அணிக்கு போட்டியிலாவது வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த போட்டியிலும் மண்ணை கவ்வியது சென்னை அணி.

தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்த சென்னை அணி மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான 4வது லீக் போட்டியில் வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு சென்னை அணி பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post சென்னை – டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article