சென்னை: டீ கடையில் அமர்ந்திருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதிய கார்... ஒருவர் பலி

1 day ago 1

சென்னை, தேனாம்பேட்டை தீயணைப்புத்துறை அலுவலகம் எதிரே டீ கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த டீ கடையில் சிலர் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலை ஓரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் , டீ கடையில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் அதிவேகத்தில் மோதியது.

இதில் நந்தனத்தை சேர்ந்த பாபு என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய அபிஸ் அகமது என்பவரை கைது செய்தனர்.

விபத்தை ஏற்படுத்திய அபிஸ் என்பவர் தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வந்தார். மேலும் இவர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article