சென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வு

3 months ago 21

சென்னை,

தக்காளி விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து விற்பனையானது.

இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த மார்க்கெட்டில் இந்த விலை என்றால், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தக்காளி விலை கிடு கிடு உயர்வுசென்னை கோயம்பேட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வுதக்காளி விலை கிலோ ரூ. 50 முதல் ரூ. 90 வரை விற்பனைசில்லறை விற்பனை நிலையங்களில் ரூ. 60 முதல் ரூ.100 வரை விற்பனைவரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக… pic.twitter.com/f7krU51vIn

— Thanthi TV (@ThanthiTV) October 8, 2024
Read Entire Article