சென்னை: குப்பையில் கிடந்த ஐபோன், தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு

2 hours ago 2

சென்னை,

சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள பொன்னப்பன் கிராஸ் தெருவில் பணிபுரியும் தூய்மை பணியாளர் சின்னம்மாள் என்பவர், குப்பையில் கிடந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை கண்டுபிடித்தார். இது குறித்து அவர் தனது மேலதிகாரியிடம் தெரிவித்தார். ஐபோன் மொபைல் நம்பர் மூலம் அதன் உரிமையாளரான நீலா மணிகண்டனை கண்டுபிடித்து ஐபோன் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 கிராம் தங்க செயினை குப்பையில் இருந்து மீட்ட இருதயமரி என்ற தூய்மை பணியாளர், அதனை தனது மேலதிகாரியிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த தங்க செயின் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் செயல்பட்ட 2 தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Read Entire Article