சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை தொடங்கி வைத்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன்

3 hours ago 3

சென்னை: கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு தொடங்கியது. திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். 50 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த வழக்கறிஞர்களான நினைவில் வாழும் தி.மு.க. முன்னாள் பொருளாளர் எஸ்.ஜே.சாதிக் பாட்ஷா, பிடிஆர் பழனிவேல் ராஜன், ஏ.எல்.சுப்ரமணியம், அ.அ.ஜின்னா ஆகியோர் பெயரில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் சட்டத்துறை மாநில மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது எங்கள் சட்டத்துறையை தோற்கடித்து திமுகவின் மீது எவராலும் கை வைக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். சட்டத்துறையில் ஜனநாயகம் மாற்றத்துக்கு உள்ளாகும் போது அதை எதிர்த்து நின்றது திமுகதான். திமுகவுக்கு வரும் ஆபத்தை சட்டரீதியாக தடுத்து நிறுத்த எங்கள் சட்டத்துறையில் இவ்வளவு பேர் உள்ளார்கள்.

ஒரு கட்சியின் மாநாட்டுக்கு உரிய கம்பீரம் திமுகவின் சட்டத்துறை மாநாட்டுக்கு உள்ளது. ஒட்டுமொத்த அதிகாரங்களையும் ஒன்றிய அரசு குவித்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசியலமைப்புச் சட்டத்தை மோடி அரசு படாத பாடு படுத்துகிறது என்று அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழக்கறிஞர்களுக்கு உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

The post சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை தொடங்கி வைத்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Read Entire Article