ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள்: மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பேச்சு

3 hours ago 3

சென்னை: தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3வது ஒரு நாள் மாநில மாநாட்டை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். திமுக சட்டத்துறை மாநாட்டில் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில்சிபில்; ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே குறைபாடு உள்ளது. அரசு நம்பிக்கை இழந்துவிட்டால் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது.

ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு பிரச்னை உள்ளது, இந்தியா என்பது ஒன்றியங்களின் அரசு. அதுதான் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும். ஒன்றியங்களை சிதைத்து ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு,ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி என்பதை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இதை இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்திய குடியரசின் ஜனநாயக பணிகளின் அடிப்படை கூறுகளை சிதைக்கும் முயற்சி தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்றார்.

இதையடுத்து பேசிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி; ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்தால் தற்போது ஆகும் தேர்தல் செலவை விட மூன்று மடங்கு கூடுதலாக செலவு ஆகும். அத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒரு கோடி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுப்பு தேவைப்படும். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் விலை ரூ.35 ஆயிரமாக இருக்கிறது. எனவே ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தும் போது கூடுதல் செலவு ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றார்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள்: மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article