சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நாளை 6 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்!

3 weeks ago 7

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நாளை 6 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை, எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதை அடுத்து, நாளை கடற்கரை – செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் நலன் கருதி, மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெளியான அறிகையில்; “நாளை(27.10.2024) அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி சென்னை கடற்கரை Yard-ல் நடைபெற உள்ளதால், காலை 04.00 மணி முதல் மாலை 17.00 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/ செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு இரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 27.10.2024 அன்று சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை மா.போ.கழகம் இயக்க உள்ளது.

27.10.2024 அன்று கடற்கரை இரயில் நிலைய பேருந்து நிறுத்தம், எழும்பூர் மற்றும் பூங்கா ரயில் நிலைய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”.

The post சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நாளை 6 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article