சென்னை சென்னையில் நேற்று நடந்த சென்னை ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்வீடன் வீரர் எலியாஸ் எமர் – பிரான்ஸ் வீரர் கைரியன் ஜேக்விட் மோதினர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 7-6, 6-4 என்ற நேர் செட்களில் கைரியன் வென்று கோப்பையை கைப்பற்றினார். அவருக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா பரிசுக் கோப்பையை வழங்கினார். அப்போது, தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ் மற்றும் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
The post சென்னை ஓபன் டென்னிஸ் பிரான்ஸ் வீரர் சாம்பியன் appeared first on Dinakaran.