சென்னை,
சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவின் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி கூட்டணி , ராய் ஹோ (சீனதைபே)- மேத்யூ கிறிஸ்டோபர் ரோமியாஸ் (ஆஸ்திரேலியா) இணையை எதிர்கொண்டது .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-6 (5), 7-6 (8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.