சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

14 hours ago 1

விளையாட்டுப் பிரிவுகள் வாரியாக
காலியிடங்கள் விவரம்:

1. Football (Men)- Goalkeeper–1, Defender-2,
Forward-1, Midfielder-2.
2. Kabadi (Women): Left Cover-1, Right Cover-1, Left Corner-1, Right Corner-1, Raider-3, All-rounder-2.
3. Basket Ball (Women): Point Guard-1, Pivot-1, Forward-3.
4. Kabadi (Men): All rounder-1.
5. Volley Ball (Men): Setter-1.
6. Volley Ball (Women): Universal-1.
7. Athletics (Women): Triple Jump-1.
8. Cricket (Men) Batsman-1.

தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டம் தேர்ச்சி அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும். இந்த கல்வித் தகுதியுடன் காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி குறைந்தது மூன்றாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.01.2025 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டுத் தகுதி, விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான நேர்முகத் தேர்வு 19.01.2025 முதல் 09.02.2025 வரை நடைபெறும். இது பற்றிய விவரம் இ.மெயிலில் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ரயில்வேயில் சீனியர் கிளார்க்/ஜூனியர் கிளார்க்காக பணியமர்த்தப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ சிறுபான்மையினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.pb.icf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2024.

The post சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை appeared first on Dinakaran.

Read Entire Article