என்னை படுகொலை செய்ய முயற்சி செய்தால் ஈரான் என்ற நாடே இருக்காது.. மொத்தமாக அழிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!!

2 hours ago 3

வாஷிங்டன்: என்னை ஈரான் படுகொலை செய்ய முயற்சி செய்தால் அந்த நாடே இருக்காது. நாட்டில் ஒன்றுமே இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, 2வது முறையாக அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன் மூலம், அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனால் பல நாடுகளும் கலக்கத்தில் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பென்சில்வேனியா மாகாணாத்தில் பிரச்சாரம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காதில் காயத்துடன் உயிர் தப்பினார். அப்போது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார். அவர், தாமஸ் குரூக் என்ற 20 வயது இளைஞர் என பின்னர் அடையாளம் காணப்பட்டார்.

இந்த தாக்குதலுக்கு பின், அமெரிக்க உளவு பிரிவினர் அவரை மேடையில் இருந்து உடனடியாக பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்து சென்றனர். இந்நிலையில், டிரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்தவர் காசிம் சுலைமானி. இவர், கடந்த 2020ம் ஆண்டில் ஆளில்லா விமானம் கொண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. இதன் விளைவாக டிரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன.

இந்நிலையில் ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்; என்னை ஈரான் படுகொலை செய்ய முயற்சி செய்தால் அந்த நாடே இருக்காது. நாட்டில் ஒன்றுமே இல்லாத அளவிற்கு ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும். இது தொடர்பாக தனது ஆலோசர்களுக்கு அறிவுகளை வழங்கி இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

The post என்னை படுகொலை செய்ய முயற்சி செய்தால் ஈரான் என்ற நாடே இருக்காது.. மொத்தமாக அழிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article