சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு

16 hours ago 3

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கூடு​தல் நீதிப​தி​களாக பணி​யாற்​றிய இரு​வர் நிரந்தர நீதிப​தி​களாக நியமிக்​கப்​பட்டு நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டனர். சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆர். சக்​திவேல், பி. தனபால் ஆகிய இரு​வரும் கூடு​தல் நீதிப​தி​களாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் நியமிக்​கப்​பட்​டனர். இவர்​கள் இரு​வரை​யும் நிரந்தர நீதிப​தி​களாக நியமிக்க உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் மத்​திய அரசுக்கு செய்த பரிந்​துரையை ஏற்று இரு​வரை​யும் நிரந்தர நீதிப​தி​களாக நியமித்து குடியரசுத் தலை​வர் உத்​தர​விட்​டார். அதன்​படி இரு​வருக்​கும் உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் நேற்று பதவிப் பிர​மாணம் செய்து வைத்​தார். அதையடுத்து இரு​வரும் நிரந்தர நீதிப​தி​களாக பொறுப்பேற்றனர்​.

Source : www.hindutamil.in

Read Entire Article