சென்னை அருகே 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: டிக்ஸன் நிறுவனத்துடன் ரூ.1000 கோடி முதலீட்டு ஒப்பந்தம்

1 week ago 5

சென்னை: சென்னையை அடுத்த ஒரகடம் இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், ரூ.1,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு அளிக்கும் வகையில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும்.

Read Entire Article