சென்னை அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை பாராட்டுகிறேன்: ப.சிதம்பரம்

5 hours ago 4

சென்னை: சென்னை அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை பாராட்டுகிறேன் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 லட்சம் ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப் படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில், பொது மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதன் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் ஏன் தெரிவித்திருந்தார். இத்தகைய அறிவிப்பிற்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் சாலைகள், திட்டங்களை நிறைவேற்றும் போது அதன் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறை 3%ஆக உள்ளது என்பதை பாராட்டுகிறேன். சென்னை அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் நிதி மேலாண்மையை நான் பாராட்டுகிறேன். காவிரி – குண்டாறு திட்டம் என்பது எடப்பாடி பழனிசாமி போட்ட வெறும் கல் மட்டும்தான். இவ்வாறு தெரிவித்தார்.

 

The post சென்னை அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை பாராட்டுகிறேன்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Read Entire Article