சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு: ‘பாலியல் சைகோ’ ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை

2 weeks ago 2

சென்னை: சென்னை அண்ணாபல்லைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ‘பாலியல் சைகோ’ ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழு விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களில் உள்ள பெண்கள் குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 24ம் தேதி இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனான 4ம் ஆண்டு மாணவனுடன் மறைவான இடத்தில் தனியாக இருந்த போது, மர்ம நபர் ஒருவர் அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து மாணவனை விரட்டி அடித்துவிட்டு மாணவியை மிரட்டி நிர்வாணமாக ‘பாலியல் தொந்தரவு’ செய்துள்ளார்.

பிறகு மாணவியின் செல்போனில் இருந்து அவரது தந்தை செல்போன் எண்ணை எடுத்து மிரட்டி எப்போது அழைத்தாலும் என்னுடன் வர வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மறுநாள் தனக்கு நடந்த சம்பவத்தை காவல் அவசர கட்டுப்பாட்டு எண் 100 உதவியுடன் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளி ஞானசேகரனை புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 3 பெண்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணை குழுவானது ஞானசேகரன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அந்த லேப்டாப்பில் ஞானசேகரன் பல பெண்களுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ பல இருந்தது. அதேநேரம் அவரது செல்போனிலும் 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது. இதையடுத்து ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்தது. அதன்படி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு 7 நாள் காவலில் விசாரணை நடத்த அனுமதி கோரி மனுதாக்கல் செய்தது. மனு மீது நடந்த விசாரணையை தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிபதி சுப்பிரமணியன் பூட்டிய அறையில் ஞானசேகரனிடம் ஒரு மணி நேரத்திற்கு மேல் விசாரணை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து ஞானசேகரனை 7 நாள் காவலில் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதி சுப்பிரமணியன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஞானசேகரனை ரகசிய இடத்தில் வைத்து மாணவி பாலியல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக ஞானசேகரனிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள ஆபாச வீடியோக்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது ஞானசேகரன் தனது 3 மனைவிகளுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ வைத்திருப்பதால், எதற்காக உங்கள் மனைவிகளை வீடியோ எடுத்தீர்கள், 50க்கும் மேற்பட்ட வீடியோக்களில் ஞானசேகரனுடன் ஒன்றாக இருந்த பெண்கள் மற்றும் இளம் பெண்கள் யார் யார்? அவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுக்கப்பட்டதா? என்பது தொடர்பான விபரங்களை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பட்டியல் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணாபல்கலைக்கழகத்தில் இதுபோன்று வேறு மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தாரா? உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு அதற்கு ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். அதேநேரம் அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24ம் தேதி இரவு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடத்திற்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். பாலியல் விவகாரம் என்பதால், சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்பவ இடத்திற்கு இரவு நேரத்தில் நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். அதேநேரம் நீதிமன்றம் நேரடி கண்காணிப்பில் இந்த விசாரணை நடந்து வருவதால், ஞானசேகரன் பாலியல் லீலைகள் குறித்த விபரங்களை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் வெளியே தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

The post சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு: ‘பாலியல் சைகோ’ ஞானசேகரனிடம் விடிய விடிய விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article