சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகிய நடராஜன்

6 days ago 6

சென்னை ,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 4வது போட்டியில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி அணியுடன் மோதுகிறது .

இந்த நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து தமிழகத்தை சேர்ந்த டெல்லி அணி வீரர் நடராஜன் விலகியுள்ளார். இது தொடர்பாக டெல்லி அணி வீரர் குலதீப் யாதவ் கூறியதாவது ,

காயம் காரணமாக சென்னையுடன் மோதும் நாளைய போட்டியில் நடராஜன் விளையாட மாட்டார். அவர் முழுமையாக உடற்தகுதி பெற்றபிறகு, அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என நம்புகிறேன். என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article