
கொல்கத்தா,
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தோல்வி தொடர்பாக பேசிய கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியதாவது,
இந்த தோல்வி மிகவும் கடினமானது , நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்தோம் என்று நினைக்கிறேன். இந்த விக்கெட்டில் 185-195 ரன்கள் ஒரு சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் இது ஒரு சிறந்த ஆட்டம் . சென்னை அணி வீரர்கள் மிகவும் நன்றாக பேட் செய்தனர் . தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர் . ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள் மிகவும் நன்றாக பந்து வீசினர் என்று நான் நினைக்கிறேன். என தெரிவித்தார் .