
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததை பாகிஸ்தான் தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.பதான்கோட் - பஹல்காம் தாக்குதல்களுக்கு தொடர்பான டி.என்.ஏ மூலம் நிரூபிக்க முயற்சி. ஆதாரங்களை தந்தும்கூட பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான். மசூத் அசார் உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளித்தது.
இந்தியாவால் கொல்லப்பட்டவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதி சடங்கு நடந்துள்ளது. பாகிஸ்தானின் எந்த வழிபாட்டுத்தளங்கள் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை.இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை. பதிலடி மட்டுமே கொடுக்கிறது. மேற்கொண்டு பாகிஸ்தான் தாக்கினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றார்.