கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு

5 hours ago 2

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் சிறுவனுக்கு இணை நோய்கள் இருந்த நிலையில் திடீரென காய்ச்சல் வந்தது தெரியவந்தது.

மேலும் நிபா வைரஸ் தொடர்பாக மத்திய அரசின் சுகாதாரத்துறை சார்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மத்திய சுகாதாரத்துறை குழு ஒன்று கேரளா விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதனையடுத்து நிபா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டம் வாலஞ்சேரியை சேர்ந்த 42 வயது பெண்ணுக்கு நிபா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது வைரஸ் கண்டறியப்பட்ட பெண் பெரிந்தல்மன்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 4 நாட்களாக அந்த பெண்ணுக்கு அதிக காய்ச்சல், தொடர்ச்சியான இருமல், சுவாசக் கோளாறு பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து பெண்ணின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கோழிக்கோடு நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டன. பின்னர் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பரிசோதனை செய்ததில் அவருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் அந்தப் பெண்ணின் வீட்டில் உள்ள 2 பேருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Read Entire Article