
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் நடந்த 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றிபெற்றது.
இந்த நிலையில், சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 7 பேரை கைது செய்தனர். ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோற்றதை கிண்டல் செய்ததால் இளைஞர் ஜீவ ரத்தினம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜீவ ரத்தினம் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மோதல் தொடர்பாக அப்பு, ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.