
சென்னை,
நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது. சென்னை அணி தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவுவது முதுவே முதல் முறையாகும். இதன் காரணமாக சென்னை அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அணி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது;
"நானே கிரிக்கெட்டர் என்பதால் இதை பற்றி பேச வேண்டாம், பேச வேண்டாம் என இருந்தேன். மிக சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டாம் என இருந்தேன். ஆனால் இது மிகவும் கோரமாக இருக்கிறது."
"ஏன் இவ்வளவு down the order வர வேண்டும். வெற்றி பெறவே கூடாது என எந்த விளையாட்டையாவது விளையடுவார்களா."
"சர்க்கஸுக்கு செல்வது போல தான் இருக்கிறது. விளையாட்டை விட ஒரு தனிநபர் பெரியது இல்லை" என விஷ்ணு விஷால் கூர் இருக்கிறார்.