பணி: கிரெடிட் ஆபீசர் (பொது வங்கி)- Credit Officer (General Banking).
மொத்த இடங்கள்: 1000 (பொது- 405, ஒபிசி-270, பொருளாதார பிற்பட்டோர்- 100, எஸ்சி-150, எஸ்டி-175).
சம்பளம்: ரூ.48,480-85,920.
வயது: 30.11.2024 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் 55% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்: பொது/ ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ₹750/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள்/பெண்களுக்கு ₹150 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.www.centralbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.02.2025
The post சென்ட்ரல் வங்கியில் 1000 இடங்கள் appeared first on Dinakaran.