செங்கோட்டையனுக்கு ஆதரவாக சிவகங்கையில் அதிமுகவினர் போஸ்டர்

1 week ago 4

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பெயரில் அண்மையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது உருவப் படங்கள் இடம்பெறவில்லை. இது தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்ததுடன், பாராட்டு விழாவை புறக்கணித்தார்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும், `எம்ஜிஆர், அம்மா அவர்களின் உண்மை விசுவாசிகள்’ என்ற பெயரில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக இன்று காலை ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில், `எம்ஜிஆர், அம்மா புகழை மறைத்து, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்த முயன்று வரும் எடப்பாடி பழனிசாமியின் எண்ணத்தை சுட்டிக்காட்டி, தன்னுடைய உரிமைக்குரலை வெளிப்படுத்திய செங்கோட்டையன், தொண்டர்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியதற்காக தொண்டர்கள் சார்பில் வரவேற்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post செங்கோட்டையனுக்கு ஆதரவாக சிவகங்கையில் அதிமுகவினர் போஸ்டர் appeared first on Dinakaran.

Read Entire Article