
சென்னை,
மதுரை மற்றும் திருச்சி கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ரெயில் (வ.எண்.16848) நாளை (வியாழக்கிழமை) விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, இந்த ரெயில் அன்றைய தினம் வழக்கமான பாதையில் மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.