செங்கோட்டை அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த புலி

4 hours ago 2

செங்கோட்டை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கேரள எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவிலை அடுத்த கல்லாறு பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாறு ஊருக்கு அருகில் வனப்பகுதியில், உடல் அழுகிய நிலையில் ஆண் புலி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே கொல்லம் மாவட்ட வன அலுவலர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கால்நடை டாக்டர் குழுவினர், இறந்த புலியின் உடலை ஆய்வு செய்தனர். இதில், இறந்தது சுமார் 13 வயதான ஆண் புலி என்றும், அது வயது முதிர்வின் காரணமாக இறந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் புலியின் உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பின்னரே அதன் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்தனர். உடற்கூராய்வுக்கு பின்னர் புலியின் உடலை வனப்பகுதியில் எரியூட்டினர். இதேபோன்று கடந்த 2-ந் தேதி அதே பகுதியில் 14 வயது மதிக்கத்தக்க பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article