செங்குன்றத்தில் தொழிலதிபர் படத்திறப்பு

2 weeks ago 3

புழல்: செங்குன்றம் ஆர்.ஜி.என்.காலனி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் செங்குன்றம் பி.தயாளன் நாயுடு (85). இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மற்றும் ஸ்ரீ பத்மாவதி அரிசி ஆலை, செங்குன்றம் ஸ்ரீ சக்கரபாணி நாயுடு திருமண மண்டபம் ஆகியவற்றின் உரிமையாளர் ஆவார். வயது மூப்பின் காரணமாக கடந்த 4ம் தேதி பி.தயாளன் நாயுடு காலமானார். இவருடைய படத்திறப்பு நிகழ்வு நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஹரிஷ், டாக்டர்கள் பிரியா மதுவ்ரதா, ராஜேஷ், ஓய்வு பெற்ற மருத்துவ கல்வி இயக்குனர் ஜெயச்சந்திரன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது மறைந்த நிலக்கிழார் பி.தயாளன் நாயுடு உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செங்குன்றம் அறிஞர் அண்ணா பார்க் தெருவில் உள்ள காரியத்துறையில் 16ம் நாள் காரியம் நடைபெற்றது.

 

The post செங்குன்றத்தில் தொழிலதிபர் படத்திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article