செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு: இலவசமாக லைசன்ஸ் எடுத்து தருவதாக உறுதி!

3 weeks ago 6

செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பொதுமக்களுக்கு இலவசமாக லைசன்ஸ் எடுத்து தருவதாக போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்தரஜு உறுதி அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு செங்கல்மட்டு அடுத்த கண்டிகை பகுதியில் நடைபெற்றவிழிப்புணர்வில் செங்கல்பட்டு போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்தராஜு கலந்துக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு, உரிமம் எடுக்க எட்டுபோடு உயிரை காக்க ஹெல்மட் போடு, மிதமான வாகன பயணம் மீதமாகும் வாழ்க்கை பயணம், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது, கார் ஓட்டும் போது சீட்பெல்ட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, பிரதான சாலையை சந்திக்கும்போது இரண்டு பக்கமும் வாகனம் வருகிறதா என எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும், சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் முன்பு ஆரஞ்சு விளக்கு எரியும் போதே நிறுத்திவிடுவது நல்லது, சாலையில் மணல் அல்லது ஆயில் கொட்டி இருந்தால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிக மெதுவாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும், மழை நேரங்களில் சாலையில் டயர் பிடிமானம் கிடையாது, எனவே வேகமாக செல்லுதல் ஆபத்து, நான்கு முனை சாலை சந்திப்பை கடக்கும்போது ஹாரன் ஒலி எழுப்புவது அவசியம், முன்னால் செல்லும் வாகனத்திற்கு அதிகமான இடைவெளி விட்டு பின் தொடர்வது நல்லது, முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடதுபுறம் ஓரமாக செல்லவேண்டும், மெதுவாக செல்லும் வாகனங்கள் இடதுபுறம் ஓரமாக செல்ல வேண்டும், இரவில் செல்லும் வாகனங்களின் பின்புறம் சிவப்பு விளக்கு கட்டாயமாக எரிய வேண்டும், நெம்பர் பிளேட்டில் அரசு தரும் எண்ணை அதற்குரிய வடிவில் மட்டுமே அமைக்க வேண்டும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லக்கூடாது, லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடை அணிய வேண்டும்.

இரவில் வாகனம் பழுதடைந்துவிட்டால் சாலையில் ஓரமாக நிறுத்தி பார்க்கிங் லைட் எரிய விட வேண்டும், பாதசாரிகள் சாலையில் நடக்கும்போது இடதுபுறமாக செல்ல வேண்டும், கனரக வாகனத்தில் வெளியே நீட்டிக்கொண்டுள்ள நீளமான கம்பிகளை ஏற்றிச் செல்லுவதை தவிர்க்கவும், இரவில் கண் கூசச் செய்யும் விளக்குகளை எதிரில் வாகனம் வரும்போது ஒளியை குறைக்க வேண்டும், இரவில் தொடர்ச்சியாக ஓட்டும்போது கண் அசதி ஏற்படும்போது ஓய்வு எடுப்பது அவசியம், மோட்டார் வாகன எச்சரிக்கை மற்றும் தகவல் சின்னங்களை கவனித்து செல்ல வேண்டும் குழந்தைகள் மற்றும் சிறார் வண்டிகளை ஓட்டுவதை தவிர்க்கவும், மூடுபனி சாலையில் முன்புறம் மஞ்சள் விளக்கை எரியவிட்டு மெதுவாக செல்லவும், நம் பின்னால் வரும் வாகனம் வழிகோரும்போது எதிரில் வாகனம் வராத சமயத்தில் இடது பக்கம் ஒதுங்கி வழிவிட வேண்டும், எதிரில் வரும் வாகனத்தை வேறு வாகனம் முந்தி வரும்போது உங்கள் வாகனத்தின் வேகத்தைக் குறைக்கவும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற இடங்களில் மிக மெதுவாக செல்ல வேண்டும், ஆட்டோக்களில் அரசு நிர்ணயித்த குறைவான எண்ணிக்கையில் நபர்களை ஏற்றிச் செல்ல வேண்டும்.

அதிக நபர்களை ஏற்றி செல்ல வேண்டாம் என துண்டு பிரசூரகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை எந்த பகுதியில் நடைபெற்றாலும் உடனே காவல்துறையினர்க்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் மேலும் இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் உரிய லைசன்ஸ் வைத்துக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும் இருசங்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் தேவை என வந்தால் எனது சொந்த பணத்தில் வைசனஸ் எடுத்து தருவதாக போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்தரஜு தெரிவித்தார். இந்த விழிப்புணரவில் பொண் விளைந்த களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி, மோசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், திருமணி சதீஷ் மற்றும் காவலர்கள் மற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

 

The post செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு: இலவசமாக லைசன்ஸ் எடுத்து தருவதாக உறுதி! appeared first on Dinakaran.

Read Entire Article