சூலூரில் ‘லிவிங் டுகெதர்’ பாணியில் குடும்பம் நடத்தியதில் தகராறு அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை

4 weeks ago 5

*ரியல் எஸ்டேட் அதிபர் சிக்கினார்

சூலூர் : சூலூர் அருகே ‘லிவிங் டுகெதர்’ பாணியில் குடும்பம் நடத்தியதில் தகராறு ஏற்பட்டு அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம் சூலூர் காடம்பாடி ஸ்கை கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் நர்மதா (48). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடிவேலம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவருடன் திருமணம் நடந்து 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 8 ஆண்டுக்கு முன் பாலசுந்தரத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நர்மதா விவாகரத்து பெற்று தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நர்மதா, ஏற்கனவே திருமணமான சரவணம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மணிகண்டன் (40) என்பவருடன் ‘லிவிங் டுகெதர்’ பாணியில் குடும்பம் நடத்தி வந்தார். மணிகண்டனுக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் ஆகியுள்ளதாக கூறப்படும் நிலையில் நர்மதாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வருவது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் நர்மதா பள்ளிக்கு செல்ல தயாராக இருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த மணிகண்டனுடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த நர்மதா தான் தங்கி இருந்த அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார். அறைக்குள் சென்ற நர்மதா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த மணிகண்டன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு நர்மதா தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.

தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நர்மதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன நர்மதாவின் முதல் கணவரின் உறவினர்கள் மற்றும் நர்மதாவின் மகள் ஆகியோர் நர்மதா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியதுடன் அவரது சாவிற்கு மணிகண்டன்தான் காரணம் என புகார் அளித்தனர்.

அதன் பெயரில் சந்தேகம் மரண என வழக்குப்பதிந்த போலீசார், மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post சூலூரில் ‘லிவிங் டுகெதர்’ பாணியில் குடும்பம் நடத்தியதில் தகராறு அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article