சூர்யாவின் "ரெட்ரோ" 3-வது பாடல் வெளியீடு

1 week ago 1

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இப்படத்தின் முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்திற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 18-ந் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் 'ரெட்ரோ' படத்தின் மூன்றாவது பாடலான 'தி ஒன்' வெளியாகியுள்ளது. இந்த பாடல் விவேக் வரிகளில் சித் ஸ்ரீராம், சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

The Song , I was waiting to Show it to you all is here....#TheOneSong from #Retro https://t.co/flAhxT0vCj A @Music_Santhosh Musicalft. @sidsriram x @shanvdp x #SaNa x @Lyricist_Vivek & Backing vocals by #Mahalakshmi & #Victor#LoveLaughterWar #RetroFromMay1 #TheOne

— karthik subbaraj (@karthiksubbaraj) April 12, 2025
Read Entire Article