
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது 44-வது படமான 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் .இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. மேலும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தன் 45-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சூர்யாவின் 46 படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெரியடப்பட்டுள்ளது. மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மே மாதம் துவங்க உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இசைப்பணி தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இயக்குனரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் இணைந்து படப்பிடிப்புக்கு முன்பாகவே, இசைப் பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும், சில காட்சிகளுக்கான பின்னணி இசையையும் முடிக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.