சூரியன் எப்எம், டிஎம்பி இணைந்து ஏற்பாடு பெண்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டி

7 hours ago 2

*லீக் போட்டிகளில் அணிகள் விறுவிறுப்பாக மோதல்

நெல்லை : பாளை.யில் நடந்து வரும் பெண்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் அணிகள் விறுவிறுப்பாக மோதி வருகின்றன.

சூரியன் எப்.எம் 93.5 கோடைகால சிறப்பு நிகழ்வாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியுடன் இணைந்து நடத்தும் மாநில அளவில் பெண்களுக்கான கிரிக்கெட் திருவிழா சீசன் 2 பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி மைதானத்தில் நேற்று துவங்கியது.

மாநில அளவில் நடைபெறும் இப்போட்டிகள் வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. கன்னியாகுமரி ஆட்டிகா கிரிக்கெட் அணி, பாவூர்சத்திரம் பிலிவ் அணி, நெல்லை சச்சின் கிரிக்கெட் கிளப், ராணி அண்ணா அணி, சூப்பர் கிங்ஸ் அணி, நெல்லை குயின்ஸ் அணி, திருச்செந்தூர் ஜிஏசிடபிள்யூ அணி, தென்காசி சூப்பர் கிங்ஸ், சென்னை ஸ்மைலிங் பேர்ல்ஸ் உள்ளிட்ட அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளன.

சதக்கத்துல்லா கல்லூரி வளாகத்தில் உள்ள இரண்டு மைதானங்களில் தினமும் இரு பிரிவாக காலை 7 மணி, 11 மணி, பிற்பகல் 2 மணிக்கு போட்டிகள் நடக்கிறது.

லீக் பிரிவு போட்டிகள் இரு பிரிவாகவும் ஒவ்வொரு அணியும் மாற்று அணியுடன் 4 போட்டிகளில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் அரை இறுதி போட்டிகள் நாக் அவுட் முறையில் நடக்கிறது. இறுதி போட்டி வரும் 25ம்தேதி நடக்கிறது.

நேற்று நடந்த 2வது நாள் போட்டியில் ஸ்மைலிங் பேர்ல்ஸ் அணியும், நெல்லை குயின்ஸ் அணியும் மோதின. இதில் நெல்லை குயின்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் கிரிக்கெட் அகடமி அணியும் ஆட்டிகா அணியும் மோதிய போட்டியில் ஆட்டிகா அணி 57 ரன் வித்தியாசத்தின் வென்றது.

ராணி அண்ணா கிரிக்கெட் அணியும் ஸ்மைலிங் பேர்ல்ஸ் அணியும் மோதிய போட்டியில் ஸ்மைலிங் பேர்ல்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தின் வெற்றியை வசமாக்கியது. மற்றொரு போட்டியில் நெல்லை குயின்ஸ் அணியும் ராணி அண்ணா அணியும் மோதின.

இதில் நெல்லை குயின்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும் பிலிவ் அணியும் ஆட்டிகா அணியும் மோதிய போட்டியில் ஆட்டிகா அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.பெண்களுக்கான இந்த போட்டியை கண்டு ரசிக்க ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்.

இப்போட்டியை சூரியன் எப்எம் 93.5 உடன் இணைந்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, டஸ்கர் டிஎம்டி, நிம்ஸ் மருத்துவமனை, ராஜகிரி, ஜே2கே, தன்வந்திரி ஆயுர்வேதா மருந்தகம், டியூன்டு, ஜி3 டயாக்னஸ்டிக்ஸ், செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக், சதக்கத்துல்லா கல்லூரி, விவேகானந்தா வித்யாஸ்ரம் பள்ளி உள்ளிட்டவை இணைந்து நடத்துகின்றன.

The post சூரியன் எப்எம், டிஎம்பி இணைந்து ஏற்பாடு பெண்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article