
கெய்ரோ,
எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இஸ்ரேல்-காசா போரால் அந்த வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சூயஸ் கால்வாய் மூலம் பெறப்படும் வருவாய் சரிந்து சுமார் ரூ.34 ஆயிரம் கோடியாக குறைந்தது. முந்தைய ஆண்டு இது சுமார் ரூ.87 ஆயிரம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.