ஒடிசாவில் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

4 hours ago 4

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அங்கு கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.

இந்த நிலையில், சுமார் 2.5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒடிசாவில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை செயலாளர் அஸ்வதி தெரிவித்துள்ளார்.

அதே சமயம், பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்கனவே சில உடல்நல பாதிப்புகள் இருப்பதாகவும், இதனால் அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலவரப்படி நிலைமை முழு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், கொரோனா தொற்று பரவல் குறித்து பொதுமக்கள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் அஸ்வதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிலருக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், கொரோனா தொற்றால் தீவிர பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளார்.

Read Entire Article