
சென்னை,
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் ரகு. இவர் தற்போது சென்னையில் மாந்திரீக தொழில் செய்து வந்தார். மேலும், இவர் யூடியூப் சேனல் தொடங்கி அதில் மாந்திரீகம் குறித்த வீடியோக்களை பதிவிட்டார். இதனைக்கூறி கூகுள் பே மூலம் பணம் பெற்று பலரை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சிபி என்ற முரசொலி மாறன் என்பவரை மாந்திரீகம் மூலம் கொல்வதற்காக ரகுவிற்கு, சுமார் ரூ. 21 லட்சம் வரை கூகுள் பே-வில் பணம் அனுப்பி இருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிபி, பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ரமேஷ் கிருஷ்ணா மற்றும் ரகுவை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.