காரிமங்கலம், பிப்.6:காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி அணைப்பகுதி, கெண்டிகானஅள்ளி பகுதியில் உள்ள தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்ஐ சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த குருராஜ்(35), சசிகுமார்(42), செஞ்சிஸ்(32), முருகேசன்(40), பெருமாள்(45), சக்திவேல்(43) ஆகியோரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
The post சூதாடிய 7 பேர் கைது appeared first on Dinakaran.