சூதாடிய 6 பேர் கைது

5 months ago 14

தர்மபுரி, ஜன.7: தர்மபுரி போலீஸ் எஸ்ஐ ரங்கசாமி மற்றும் போலீசார், நேற்று ரோந்து சென்றனர். அப்போது குப்பாண்டி தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில், பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 6 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பாலாஜி(42), சுரேஷ்(43), நாகராஜ்(53), தமிழ்செல்வம்(65), காவேரி(65), கிருஷ்ணன்(43) என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும், போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ₹8160 பறிமுதல் செய்தனர்.

The post சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article