சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: டெல்லி கேப்டன் அக்சர் படேல்

1 week ago 5

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர்.இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில்,பெங்களூருவுக்கு எதிரான வெற்றி தொடர்பாக டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது,

நாங்கள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றபோது, 4-வது போட்டியிலும் வெற்றி சாத்தியமாகும் என்று நினைத்தோம். எல்லோரும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குல்தீப் யாதவ் பல ஆண்டுகளாக ஐ.பி.எல்.லில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது ஒரு நல்ல விஷயம். விப்ராஜ், முதல் இரண்டு ஆட்டங்களில், அழுத்தத்தை உணர்ந்தார்.

ஆனால் கடைசி ஆட்டத்திலும் இந்த ஆட்டத்திலும் அவர் பந்து வீசிய விதம் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. நாளுக்கு நாள் அவர் முன்னேறி வருகிறார். அவர் கேப்டனுக்கு நம்பிக்கையைத் தருகிறார். அதை விட சிறந்த விஷயம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article