சுல்தான் கோப்பை ஆக்கி: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி

3 months ago 22

ஜோஹர்,

12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) தொடர் மலேசியாவில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதியது. இந்திய அணி சார்பில் தில்ராஜ் சிங் (17-வது மற்றும் 50-வது நிமிடம்), ஷர்தா நந்த் திவாரி (20-வது மற்றும் 50-வது நிமிடம்), முகமது கோனைன் (7-வது நிமிடம்), மன்மீத் சிங் (26-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இங்கிலாந்து அணியில் ரோரி பென்ரோஸ், மைக்கேல் ராய்டன் தலா 2 கோல் போட்டனர்.

இறுதியில் ஆட்டநேர முடிவில் இந்தியா 6-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாகும். இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மலேசியாவை நாளை சந்திக்கிறது.

Read Entire Article