சுற்றுச்சூழலை காக்கும் வகையில் குன்னூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் மரக்கன்று நடவு செய்யும் பணிகள்

4 hours ago 1

குன்னூர் : சுற்றுச்சூழலை காக்கும் வகையில் குன்னூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் குப்பைகளை அகற்றி, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியது.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் காசிநாதன் தலைமையில் குப்பைகளை அகற்றி, சுற்றுச்சூழலை காக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியது. இதில் முதற்கட்டமாக குன்னூர் நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றி, பள்ளி வளாகத்தை சுற்றி மர நாற்றுகள் நடப்பட்டது.

இதுகுறித்து திட்ட இயக்குநர் பேசியதாவது: சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். இயற்கை விவசாயத்தினை கையாள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதோடு உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

சுற்றுச்சூழலை காக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். சுற்றுப்புற சூழலை பாதுகாத்திடும் வகையில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தமிழக அரசால் மீண்டும் மஞ்சப்பை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க மகளிர் திட்டத்தில் பணியாற்றும் வட்டார மேலாளர், சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள், குழு உறுப்பினர்கள் பலர் இணைந்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான முயற்சியில் அனைவரும் பங்கெடுப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

The post சுற்றுச்சூழலை காக்கும் வகையில் குன்னூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் மரக்கன்று நடவு செய்யும் பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article