தேவையான பொருட்கள்:
சுரைக்காய் -ஒன்று
சர்க்கரை -ஒரு கப்
பால்- ஒரு கப்
மில்க்மெய்டு- மூணு டேபிள் ஸ்பூன்
நெய் -7 டேபிள்ஸ்பூன்
ஏலத்தூள்- 1டீஸ்பூன்
ஒடித்து நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகள்- ரெண்டு டேபிள் ஸ்பூன்
பச்சை ஃபுட் கலர்- ஒரு டீஸ்பூன்
செய்முறை:
சுரைக்காயை தோல் சீவி விதை நீக்கி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சுரைக்காய்த் துருவலை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் அதில் மில்க் மெய்டு, சர்க்கரை சேர்த்து பச்சை ஃபுட் கலர், ஏலத்தூள் சேர்க்கவும். இடையிடையே நெய்விட்டு நன்றாக கிளறி அல்வா பதம் வந்ததும் முந்திரியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்.
The post சுரைக்காய் அல்வா appeared first on Dinakaran.