சுருளி அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

3 months ago 20

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா, புண்ணிய தலமாக விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த மலைப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து அருவியாக கொட்டுகிறது. இதில் குளித்தால் நோய் நீங்கும் என்பது ஐதீகம். இப்படி சிறப்பு பெற்ற சுருளி அருவியில் குளிப்பதற்காக தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் சுருளி அருவியில் நீர்வரத்து குறைய தொடங்கியவுடன் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றனர்.

சுருளி அருவியில் குளிக்கத் தடைதேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு#Theni #SuruliFalls #Tourist #ForestDepartment #ThanthiTV pic.twitter.com/5fi2BHgX7Q

— Thanthi TV (@ThanthiTV) October 20, 2024
Read Entire Article