சுரண்டை அருகே சாம்பவர் வடகரையில் அபாய நிலையில் 25 மின்கம்பங்கள்

2 weeks ago 1

*விரைவில் மாற்றி அமைக்க கோரிக்கை

சுரண்டை : சாம்பவர்வடகரை பேரூராட்சியில் அபாய நிலையில் உள்ள 25க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அசம்பாவிதம் ஏற்படும் முன்னதாக விரைவில் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பழைய மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என மக்களுடன் முதல்வர் முகாமில் சாம்பவர் வடகரை பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளர் முத்து கோரிக்கை மனு அளித்தார்.

இந்நிலையில் சாம்பவர் வடகரை 5வது வார்டு பெத்த பெருமாள்தெரு, அம்மன் கோயில் வடபுறம் உள்ள மின்கம்பங்கள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்கம்பங்களை பொதுமக்கள் கயிறு கட்டி வைத்துள்ளனர். உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

இப்பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன்பு உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சுரண்டை அருகே சாம்பவர் வடகரையில் அபாய நிலையில் 25 மின்கம்பங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article