'சுமோ' படத்தின் டிரெய்லர் வெளியானது

4 weeks ago 3

சென்னை,

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சுமோ'. இயக்குனர் ஹோசிமின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 25-ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்பொழுது படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Caution ⚠️ : Watching this trailer may cause sudden wrestling ♂️ urges! https://t.co/7B4liAhf8x#Sumo Trailer (Ver 2.0) is OUT NOW !@IshariKGanesh @VelsFilmIntl @sphosimin @actorshiva @sumoActor @priyaanand @DirRajivMenon @cinemainmygenes @nivaskprasanna @Ashkum19pic.twitter.com/r0qvYypCUF

— Vels Film International (@VelsFilmIntl) April 20, 2025
Read Entire Article