சுப்ரீம் கோர்ட்டை மக்கள் கோர்ட்டாக உருவாக்க முயற்சித்து வருகிறேன்: டி.ஒய். சந்திரசூட் பேச்சு

3 weeks ago 8

பனாஜி,

கோவாவின் பனாஜி நகரில் சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர்களுக்கான கூட்டமைப்பு சார்பில், சர்வதேச சட்ட மாநாடு ஒன்று நடந்தது. சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஒருவரையொருவர் முழுமை பெற செய்கின்றனர்.

நாம், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பலனடைபவர்கள் என்பதுடன், ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்று கொள்வதும் மற்றும் ஒரு சுதந்திர மற்றும் வலிமையான நீதித்துறையாக சிறந்த முறையில் செயல்படுவதற்கான பணியை செய்து வருகிறோம் என்றார். நான் இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்றது முதல், சுப்ரீம் கோர்ட்டை மக்கள் கோர்ட்டாக உருவாக்க முயற்சித்து வருகிறேன்.

கோர்ட்டின் பழைய நடைமுறைகளை, தொழில் நுட்பம் பயன்படுத்தி மாற்ற முயற்சித்து வருகிறேன். கோர்ட்டு பாஸ் பெறுவது, மின்னணு முறையில் வழக்கு பதிவு செய்வது மற்றும் ஆன்லைனில் ஆஜர் ஆவது உள்ளிட்ட பல்வேறு அன்றாட பணிகளை எளிமைப்படுத்தவும் முயற்சித்து வருகிறேன்.

கோர்ட்டு மற்றும் வழக்கு தொடுத்தவர் ஆகிய இரு தரப்பினரையும் இணைக்கும் பாலம் போன்று பொறுப்புணர்வுடன் செயல்படுகிறோம் என உறுதி செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்களை அவர் கேட்டு கொண்டுள்ளார்.

உங்களுடைய வழக்கிற்கு நீங்கள் பொறுப்பேற்பதுடன், அந்த வழக்கானது விவர தொகுப்புகளை முறையாக கொண்டிருக்கிறது, சிறந்த முறையில் விளக்கப்பட்டு உள்ளது மற்றும் குறைபாடுகள் எதுவுமின்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது உறுதி செய்யப்படுவதும் உங்களுடைய பொறுப்பாகும் என்று பேசியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் இயந்திரம் சீராக இயங்குவதற்கான எண்ணெய்யாக அவர்கள் இருக்கின்றனர் என கூறிய அவர், வழக்கு தொடுப்பவர்கள் மற்றும் வழக்கறிஞர்களை அதிகளவில் சுப்ரீம் கோர்ட்டை நாட செய்யும் பணியிலும் அவர்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று நீதிபதி சந்திரசூட் சுட்டிக்காட்டி உள்ளார். கோர்ட்டு நீதியை வழங்க அனுமதிக்கும் வகையில் உள்ளது என உறுதி செய்வதும் அவர்களின் முதன்மையான பணியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Read Entire Article