
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற மெட்ராஸ் பார் அசோசியேசனின் 160வது ஆண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது ,
இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை ஐகோர்ட்டு. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியம் . அரசமைப்பின் முக்கிய விஷயமான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிதி போன்றவற்றில் மாநில அரசுகள் பாதிக்கப்படுகின்றன. அரசமைப்பை பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை சென்னை ஐகோர்ட்டு அளித்து வருகிறது . சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் . தென் மாநில மக்கள் வழக்கறிஞர்களுக்கு பயனாக அமையும் என தெரிவித்தார்.