பெ.நா.பாளையம், பிப்,21: கோவை மாநகராட்சி 15வது வார்டு சுப்ரமணியம்பாளையம் ஜல்லிக்கொரை பகுதியில் மயானத்தை மேம்படுத்த நிதி வேண்டி மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சை முத்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ அருண்குமாருக்கு மனு கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் பணி ஒப்புதல் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட அருண்குமார் எம்எல்ஏ பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சை முத்து, மாவட்ட செயலாளர் அப்துல் காதர், வார்டு தலைவர் செந்தில் குமார், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post சுப்பிரமணியம்பாளையத்தில் மயானம் மேம்படுத்தும் பணி துவக்கம் appeared first on Dinakaran.